Lalita parameswari

This blog is mainly to describe the glory of sri lalithambal and her forms

Monday, 6 June 2011

devi neeye thunai
Posted by shakthi dasan at 01:56 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Home
Subscribe to: Posts (Atom)

About Me

My photo
shakthi dasan
This is ragav working at private organisation,intrested in upanyasams and carnatic music
View my complete profile

Facebook Badge

Raghav Sekar

Create Your Badge

Blog Archive

  • ▼  2011 (1)
    • ▼  June (1)
      • devi neeye thunai

Followers

லலிதா சஹஸ்ரநாமம்

லலிதா சஹஸ்ரநாமம்

அம்பிகையின் வடிவங்களில் முக்கியமானது ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா. அந்த வடிவத்துக்குரியதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.

இந்து சமயத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இவை பெருங்கதைகள். இந்தப் புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட புராணம். அதன் பின்பகுதியில் இருக்கும் உத்தரகாண்டத்தில் லலிதா உபாக்கியானம் என்னும் அத்தியாயத்தில் லலிதா சஹஸ்ர நாமம் விளங்குகிறது.

தோன்றிய விதம்

பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி லலிதாவாக வருகிறாள். அவளுடைய வெற்றி விழாவின் போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள். அவளுடைய விருப்பத்தின்பேரில் அப்போது வசினி என்னும் தேவதையின் தலைமையில் பதினொரு வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர்.

அவ்வாறு பாடப்பட்டதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.

ஆயிரம் மந்திரங்கள்

இந்த ஆயிரம் மந்திரங்களும் அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமானவை. இவற்றை யார் கூறுகிறார்களோ அவர்கள் அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள். இதனை சஹஸ்ரநாமத்தின் ‘பல சுருதி’ என்னும் பகுதி கூறுகிறது.

ஆகையினால்தான் தீவிரமான சாக்தராக விளங்கி அம்பிகையின் பேரருளுக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும் என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா சஹஸ்ரநாமத்தைக் கூறவேண்டியது அவசியமாகிறது. சக்தியின் ஆலயங்களிலெல்லாம் இது சொல்லப் படவேண்டும்.


இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜாதியோ மரபோ சக்தி வழிபாட்டில் தடையாக விளங்குவதில்லை. போதிய பயிற்சி இருந்தால் இருபதே நிமிடங்களில் இதனைச் சொல்லி விடலாம்.


ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம் விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும் இதனால் மிகவும் பெருமகிழ்ச்சி அடைந்து அருள் புரிவாள்.

ஸ்ரீசக்ரம் அல்லது அம்பிகையின் உருவப் படம், ஸ்ரீசக்ர மஹாமேரு ஆகியவற்றின் முன்னிலையில் சஹஸ்ரநாமத்தைச் செய்யலாம்.
அல்லது சும்மா அமர்ந்து கொண்டு வெறும் பாராயணமாகவும் கூட செய்யலாம். சற்றுப் பயிற்சி வந்த பிறகு எந்த நேரத்திலும் மனதிற்குள் அந்த மந்திரங்களை ஓடவிடலாம். வேறு ஏதாவது செய்துகொண்டிருக்கும் போதுகூட அந்த மந்திரங்களில் சிலவற்றையாவது தோன்றுகிற இடத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கலாம்.

செவ்வாய், வெள்ளி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய நாட்களில் செய்வது சிறப்பு.

வில்வ இலை, துளசிப் பூங்கொத்து, செம்பரத்தம்பூ, நந்தியாவட்டை மல்லிகை, சம்பகம், அரணி முதலிய மலர்கள் சிறப்பு. வேறெந்த மலரையும் வைத்துச் செய்யலாம். சரஸ்வதி பூஜையன்று செய்வதும் நல்லது.

அம்பிகையின் பக்தர்களுக்கு அம்பிகையே ஏதாவது வகையில் குருவாய் வருவாள். வழியையும் காட்டுவாள். அல்லது தகுந்த குருவை அடைய வழி செய்வாள்.

lalithambal

lalithambal

Story of Lalitha sahasranama

This stotra (hymn which praises) occurs in Brahmanda purana (Old epic of the universe) in the Chapter on discussion between Hayagreeva and Agasthya.Hayagreeva is an incarnation of Vishnu with the horse head and is believed to be the storehouse of knowledge. Agasthya is one of the great sages of yore who is one of the stars of the constellation great bear. At his request Hayagreeva taught him the most holy 1000 names of Lalitha.

Parama shiva is one of the trinity of Hindu pantheons who is in charge of destruction. He married Sathi , the daughter of Daksha. Daksha and Paramashiva were not getting on well and consequently he did not invite Paramashiva for one of the great fire sacrifices that he conducted. However Sathi went to attend the function in spite of Paramashiva’s protest. Daksha insulted her husband and she jumped in to the fire and ended her life. Consequently at the behest Of Paramashiva Daksha was killed and later given life with a goat’s head. However this incident upset Paramashiva and he entered into deep meditation.Sathi took birth as the daughter of the mountain(Parvathy) Himalayas and started doing penance on Shiva for getting him as her husband. The devas faced a very great enemy in Sura Padma who had a boon that he could be killed only by a son of Shiva and Parvathy. So to wake Shiva from his deep meditation the devas deputed Manmatha , the God of love who shot his flower arrows at Paramashiva. Paramashiva woke up and opened his third eye and burnt the God of love into ashes. The Devas and Rathi Devi the wife of Manmatha requested Paramashiva to give life to Manmatha. Heeding for their request Paramashiva stared at the ashes of Manmatha.From the ashes came Bhandasura Who made all the world as impotent and ruled from the city called Shonitha pura.He started troubling the devas.The devas then sought the advice of Sage Narada who advised them to conduct a fire sacrifice. From the fire rose Sri Lalitha Tripura Sundari.

She was extremely beautiful, having dark thick long hair with scent of Champaka, Asoka and Punnaga flowers, having the musk thilaka on her forehead, Having eyelids which appeared as if it is the gate of the house of God of love ,having eyes which were like fish playing in the beauteous lake of her face, Having nose with studs which shined more than the stars, Having ears with sun and moon as studs, having cheeks which were like mirror of Padmaraga, Having beautiful rows of white teeth, Chewing Thamboola with camphor, having voice sweeter than the sound emanating from Veena of Sarswathi, Having such a beautiful smile that Lord Shiva himself could not take his eyes off, Wearing Mangala soothra and necklaces with beautiful shining dollars, Having breasts which were capable of buying the invaluable love of Kameswara, having row of faint beautiful hair raising from her belly, having stomach with three pretty folds, wearing red silk tied with a string with red bells. Having thighs which steal the heart of Kameshwara, Having knees which looked like crowns made of precious gems, having voluptuous legs, having upper part of the feet resembling the back of tortoise, Having feet which resembled the lamps made of gems which could dispel worries from the mind of devotees and a body with the golden red colour. She was given in marriage to Lord Kameshwara and made to stay in Sree Nagara at the top of Maha Meru Mountain.

Sree nagara had 25 streets circling it. They are made of iron, steel, copper, lead, alloy made of five metals, silver, gold, the white Pushpa raga stone, the red Padmaraga stone. Onyx, diamond, Vaidoorya, Indra neela (topaz), pearl, Marakatha, coral, nine gems and mixture of gems and precious stones. In the eighth street was the forest of Kadambas. This is presided by Syamala. In the fifteenth street live the Ashta Digh palakas.In the sixteenth lives Varahi alias Dandini who is her commander in chief. Here Syamala also has a house. In the seventeenth street live the different Yoginis.In the eighteenth street lives Maha Vishnu.In the nineteenth street lives Esana, in the twentieth Thara Devi, twenty first Varuni , the twenty second Kurukulla who presides over the fort of pride, twenty third Marthanda Bhairawa, twenty fourth the moon and twenty fifth Manmatha presiding over the forest of love. In the center of Srinagara is the Maha Padma Vana(The great lotus forest) and within it the Chintamani Griha (The house of holy thought),In its north east is the Chid agni kunda and on both sides of its eastern gate are the houses of Manthrini and Dhandini.On its four gates stand the Chaduramnaya gods for watch and ward. And within it is the Sri chakra.In the center of Sri Chakra on the throne of Pancha brahmas on the Bindu Peeta(dot plank) called sarvanandamaya(universal happiness) Sits Maha Tripura Sundari.In the Sri Chakra are the following decorations viz., The square called Trilokya mohanam(most beautiful in the three worlds), The sixteen petalled lotus called Sarvasa paripoorakam(fulfiller of all desires), the eight petalled lotus called Sarvasamksopanam(the all cleanser), the sixteen corner figure called Sarva sowbagyam(all luck),the external ten cornered figure called Sarvartha sadhakam (giver of all assets), the internal ten cornered figure called Sarva raksha karam(All protector), the eight cornered figure called Sarva roka haram(cure of all diseases), triangle called Sarva siddhi pradam(giver of all powers) and the dot called Sarvananda mayam(all pleasures).

The devas prayed her to kill Bhandasura..When she started for the war with Bandasura, she was accompanied by the powers called anima, mahima etc, Brahmi, Kaumari, Vaishnavi, Varahi, Mahendri, Chamundi, Maha Lakshmi, , Nitya Devaths and Avarna Devathas who occupy the Sri Chakra.While Sampatkari devi was the captain of the elephant regiment, Aswarooda devi was the captain of the cavalry.The army was commanded by Dhandini riding on the Charriot called Giri Chakra assisted by Manthrini riding on the chariot called Geya Chakra..Jwala malini protected the army by creating a fire ring around it.ParaShakthi rode in the center on the chariot of Sri Chakra.Nithya Devi destroyed a large chunk of Bandasura’s armies , Bala Devi killed the son of Bandasura, and Manthrini and Dhandini killed his brothers called Vishanga and Vishukra.When the Asuras created blockade for the marching army, Sri Lalitha Tripura sundari created Ganesha with the help of Kameshwara to remove the blockade.Then Bandasura created the asuras called Hiranyaksha, Hiranya Kasipu and Ravana.The Devi created the ten avatars of Vishnu and destroyed them. She killed all his army using Pasupathastra and killed him with Kameshwarasthra.The gods then praised her.She then recreated Manmatha for the good of the world. This story is contained in the first 84 names of the first 34 slokas of Lalitha Sahasra nama .and all together contains one thousand names. This is also called the Rahasya Nama Sahasra(the thousand secret names).Reading it , meditating on the meaning of the names would lead to the fulfillment of all the wishes of the devotees.

ஸ்ரீலலிதாம்பிகையின் அவதாரம்



மன்மதன் அழகுக்கும் காதலுக்கும் உரிய தெய்வம். தன்னுடைய நெற்றிக்கண்ணால் அவனை சிவபெருமான் ஒருமுறை எரித்துவிட்டார். மன்மதனின் உடல் சாம்பலாகிவிட்டது.

சிவபெருமானுடைய கணங்களில் ஒருவனாகிய சித்திரகர்மா
அந்தச் சாம்பல் குவியலை மீண்டும் உருவமாக்கினான் .
அந்தச் சாம்பல் வடிவின் மீது சிவனுடைய பார்வை விழுந்தது. தம்முடைய ஜயாமுடியின் கற்றைகளை உதறினார். அவற்றிலிருந்து ஜீவாம்ருதத் துளிகள் அந்த சாம்பற் குவியலின்மீது விழுந்தன. உடனே அது உயிர் பெற்றெழுந்தது.

அசுரனாக அந்த உரு விளங்கியது.
ஸ்ரீருத்ரம் என்னும் மந்திரத்தால் அந்த அசுரன் சிவனை வழிபட்டான்.
தன்னோடு போரிடும் எதிரியின் பலத்தில் பாதியைத் தான் பெற்றுவிட வேண்டும் என்றும் எதிரியின் ஆயுதங்கள் வலுவிழந்து போகவேண்டும் என்றும் வரம் கேட்டான்.
அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு மட்டுமே பலிக்குமாறு சிவன் வரமளித்தார்.

பிரமனால் அவனுக்கு ‘பண்டாசுரன்’ என்ற பெயர் ஏற்பட்டது.
போரினால் அவனை வெல்லமுடியவில்லை. ஆகவே தேவர்களை அடக்கி ஆண்டான்.
போரிடாத தேவர்களைப் பெரும் யாகங்கள் செய்து வரவழைத்து அவர்களின் ஆற்றலைத் தானே வாங்கிக் கொண்டான். அவர்களைத் தமக்கு ஏவல் புரியச்செய்தான்.

ஸ்ரீருத்ரம், வேதமந்திரங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி பண்டாசுரனும் அவனைச் சேர்ந்த மற்ற அசுரர்களும் ஆற்றல்களைப் பெருக்கிக் கொண்டனர்.
பலம் மிகுந்த விஷங்கன், விசுக்ரன் ஆகியோர் அவனுடைய புஜங்களிலிருந்து தோன்றி அவனுடைய தம்பியராக விளங்கினர். மேலும் முப்பத்திரண்டு மகன்களையும் உருவாக்கிக் கொண்டான். இன்னும் கோடிக்கணக்கான பல அசுரர்களையும் உண்டாக்கிக் கொண்டான்.
சூன்யகம் என்னும் தலைநகரத்தையும் ஏற்படுத்தி அங்கு இருந்து கொண்டு தேவர்களை அடக்கியாண்டான்.

தேவர்கள் கூடி ஆலோசனை செய்தபோது அம்பிகையை வழிபட்டு அவளிடம் வேண்டி, பண்டாசுரனை அழிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

தேவர்கள் தங்களுடைய உள்ளத்திலும் ஆன்மாவிலும் சம்பந்தப்பட்ட ‘சித்’ என்னும் அறிவுமயமான அக்னிகுண்டத்தை அமைத்துத் தங்களின் உடலையே போட்டு ஹோமம் செய்தார்கள்.
தேவி லலிதாவாக அம்பிகை தோன்றினாள். மகா திரிபுர சுந்தரியாகிய அவளைக் காமேசுவரர் என்னும் வடிவில் சிவன் மணந்து கொண்டார்.
தனக்குரிய ஸ்ரீபுரம் என்னும் இடத்தில் சிந்தாமணி கிரகம் என்னும் அரண்மனையில் சிங்காசனத்தின் மீது வீற்றிருந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டாள்.

ஸ்ரீலலிதாதான் சகல பிரபஞ்சங்களுக்கும் தாய். ஜகத் ஜனனி எனப்படுகிறாள். மஹாதிரிபுரசுந்தரி, திரிபுரை, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி என்றெல்லாம் அவளுக்குப் பெயர்களுண்டு. பாசம், அங்குசம், கரும்பு, ஐந்துவகையான மலர் அம்புகள் இவற்றைக் கரங்களில் தாங்கியிருப்பாள். மூன்று கண்களுடன் முடியில் மீது பிறைச் சந்திரனையும் அணிந்திருப்பாள். பேரழகி. மஹாமாயையாக விளங்கும் அவள் மோஹினியாகவும் விளங்குகிறாள். ஆயிரம் உதய சூரியர்களின் காந்தியுடையவள். தன்னுடைய செந்நிறத்தால் இந்த புவனங்கள் அனைத்தையும் பிரகாசிக்கச் செய்பவள். காரணமில்லாமலேயே கருணைகாட்டுபவள். இவள்தான் காஞ்சியில் காமாட்சியாக வீற்றிருக்கிறாள்.

பண்டாசுரனுக்குக் கிடைத்த வரத்தின்படி அவனுடைய எதிரியின் பலத்தில் பாதி அவனுக்குச் சேர்ந்துவிட வேண்டும். அவ்வாறு கிடைத்த பாதி பலத்துடன் பண்டாசுரனுடைய சொந்த பலமும் சேர்ந்து கொள்ளும். அளவுள்ள சக்தி படைத்தவர்களுடைய ஆற்றலைத்தான் அவ்வாறு பிரிக்கமுடியும். ஆனால் அம்பிகையோ அளவற்ற சக்தி படைத்தவள். அளவற்ற சக்தியில் பாதியை எப்படிப் பிரிக்க முடியும்? ஆகவேதான் அம்பிகையே பண்டாசுரனை அழிக்கச் சென்றாள்.

மந்திரிணீ, தண்டநாதா, ஜ்வாலா மாலினி, பாலா திரிபுர சுந்தரி, அச்வாரூடா, சம்பத்கரீ ஆகிய முக்கிய சக்திகளுடன் பண்டாசுரனுடன் போருக்குச் சென்றாள்.

மந்த்ரிணீ என்னும் ராஜசியாமளாதான் ராஜராஜேஸ்வரியின் மந்திரி. மதுரையில் மீனாட்சியாக விளங்குகின்றாள்.
தண்டநாத அல்லது தண்டினீ என்பவள் அம்பிகையின் சேனாபதி. மஹாவாராஹி விளங்கும் அவள் திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியாக இருக்கிறாள்.
ஜ்வாலா மாலினி என்னும் சக்தி நெருப்பால் ஒரு கோட்டையைப் பாதுகாப்புக்காக எழுப்பினாள். ஸ்ரீசக்கரராஜம் என்னும் தேரில் லலிதாவும் கேயசக்கரம் என்னும் தேரில் மந்திரிணியும் கிரிசக்கரத் தேரில் தண்டநாதாவும் அமர்ந்து கொண்டனர்.

திரஸ்கரீணி, நகுலி, நித்யாதேவிகள் முதலிய சக்திகளையும் மேலும் பல சக்தி கணங்களையும் அம்பிகை படைத்துக் கொண்டாள்.

போரில் பண்டாசுரனின் அசுரர்களையும் அவனுக்குத் துணையாக வந்தவர்களையும் அவர்கள் அழித்தனர். பண்டாசுரனின் குமாரர்களை பாலாதிரிபுர சுந்தரி விளையாட்டாகவே அழித்து விட்டாள். அந்த வீரத்தால் அன்னை மகிழ்ந்தாள். பாலாதிரிபுர சுந்தரி, லலிதா தேவியின் மகள் என்று கூறப்படுகிறாள். லலிதா தேவியிடமிருந்து தோன்றிய இன்னொரு பிரதி போன்றவள். லலிதாவைப் பேரரசியாகவும் பாலாவைப் பட்டத்திளவரசியாகவும் கருதுவார்கள். அம்பிகை வழிபாட்டில் பாலாவை வழிபட்டதன் பிறகு லலிதாவை வழிபடுவது வழக்கம். லலிதாவின் வழிபாட்டை ஸ்ரீவித்யை என்றும் பாலாவின் வழிபாட்டை லகு ஸ்ரீவித்யை என்றும் கூறுவார்கள்.

பண்டாசுரனுடைய தம்பியாகிய விஷங்கனை மந்திரிணீ அழித்தாள். மந்திரிணீயை சியாமளா என்றும் ராஜசியாமளா என்றும் கூறுவார்கள். வேத சொருபமான கிளியையும் மாணிக்கவீணையையும் தாங்கியிருப்பாள். இவள்தான் ராஜராஜேஸ்வரியான லலிதாவின் மந்திரியாக விளங்குபவள். லலிதாவின் ராஜ்ய நிர்வாகத்தைக் கவனிக்கும் முத்ரேஸ்வரி அவள்.

ராஜ சியாமளாவே மதுரையில் மீனாட்சியாக விளங்குகிறாள்.
பண்டாசுரனின் இன்னொரு சகோதரனாகிய விசுக்ரன் தன்னுடைய அசுரமாயையால் ஒரு யந்திரத்தை உருவாக்கினான். விக்னயந்திரம் எனப்படும் அந்த யந்திரத்தை அக்னிக் கோட்டைக்குள் வீசியெறிந்துவிட்டான். அது அங்கு மறைந்து இருந்து செயல்பட்டது.

சோம்பல், செயலின்மை, முடியாது என்ற தாழ்வுணர்ச்சி, தூக்கம், மயக்கம், ஊக்கமின்மை, தன்மானமிழத்தல் போன்ற உணர்ச்சிகளை அந்த யந்திரம் சக்தி சேனையில் ஏற்படுத்தியது. அதனால் சக்திகளின் தரப்பில் யுத்தப் பணிகள் தடைப்பட்டன.

லலிதா தன்னருகே அமர்ந்திருக்கும் சிவனாகிய காமேசுவரரைப் புன்னகையுடன் நோக்கினாள். அவரும் முறுவலுடன் நோக்கினாள். இருவரது பார்வைகளும் கலந்தவுடன் அங்கு மஹாகணபதி தோன்றினார்.

பத்துக்கரங்களும், மூன்று கண்களும், பிறைச்சந்திரனும் அணிந்து, வல்லபை என்னும் சித்தலட்சுமியைத் தன் மடியின் மீது அமர்த்திய வண்ணம் விளங்கினார்.

மஹாகணேசர் உடனே விக்னயந்திரத்தைக் கண்டுபிடித்துத் தன் கொம்பால் தூளாக்கினார்.
விக்னயந்திரம் அழிந்ததோடு சக்தி சேனையின் செயலின்மையும் அகன்றது. இதைக் கண்டு லலிதா மகிழ்ச்சியடைந்தாள்.

விசுக்ரனை தண்டநாதா அழித்தாள். தண்டநாதாவுக்கு வாராஹி, பஞ்சமி என்றெல்லாம் பெயர்களுண்டு. வராஹ முகம்கொண்டு கலப்பையும், உலக்கையும் கரங்களில் வைத்திருப்பாள். லலிதாவின் சேனாதிபதி இவள்தான். இவளே திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியாகத் திகழ்கிறாள்.

அம்பிகையுடன் பண்டாசுரன் போர் புரியச் சென்றான்.
போரிட வந்திருப்பவள் அகண்ட பரிபூரண ஆதிபராசக்தி என்பதை
அறிந்துகொண்ட பண்டாசுரன் அன்னைக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் அவளைத் துதித்து மூன்று பாணங்களைச் செலுத்தினான். அவை மலர் அம்புகளாக மாறி அன்னையின் பாதங்களில் விழுந்தன.
பின்னர் பண்டாசுரன் விடுத்த அனைத்து ஆயுதங்களுக்கும் பதில் ஆயுதங்களைப் பொழிந்தாள் லலிதா.

தன்னுடைய குமாரர்கள், தம்பியர், படைகள், பெரும் வீரர்கள் முதலியவர்களை இழந்த பண்டாசுரன் லலிதாவுடன் எஞ்சிநின்ற படைகளுடன் போர்புரிய வந்தான்.

பல ஆயுதங்களையும் இழந்த பண்டாசுரன் தன்னுடைய மாயையால் பல அசுரர்களைத் தோற்றுவித்தான். தன் இருகை விரல் நகங்களைச் சுண்டி, மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் லலிதா தோன்றச் செய்தாள். அந்த அவதாரங்கள் அனைத்து மாயா அசுரர்களையும் அழித்தன.

மஹாபாசுபதம் என்னும் அஸ்திரத்தைச் செலுத்தி பண்டாசுரனுடைய சேனையை அம்பாள் அடியோடு எரித்து அழித்தாள்.
காமேஸ்வர அஸ்திரத்தைக் கொண்டு பண்டாசுரனையும் எரித்துவிட்டாள்.

இதனால் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்களால் துதிக்கப்பட்ட பெருமை அவளுக்கு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் சிவனுடைய நெற்றிக்கண் பார்வையால் எரிக்கப்பட்ட மன்மதனை மீண்டும் உயிர் பெறச் செய்து அவனுக்கு சஞ்சீவினி மூலிகையாகத் திகழ்ந்தாள்.

ஸ்ரீ புரம் என்னும் நகரத்தில் அவளுடைய அரண்மனையில் எல்லாத் தேவதைகளும் சூழ லலிதாதேவி கொலுவிருக்கையில் வஸீனி முதலிய வாக்கு தேவதைகள் லலிதா சஹஸ்ரநாம தோத்திரத்தால் அம்பிகையைத் துதித்தனர்.

“என் கட்டளையாலேயே இந்த ஒப்புயர்வற்ற தோத்திரத்தை வாக்கு தேவிகள் செய்துள்ளார்கள். இதை நீங்கள் எப்போதும் என்னுடைய பிரீதியின் வளர்ச்சிக்காகப் படிப்பதுடன் என் பக்தர்களிடமும் பரவும்படி செய்யுங்கள். பூஜையும் ஜபமும் செய்தாலும் செய்யாவிட்டாலும் இந்த சஹஸ்ரநாமத்தை எனது பிரீதிக்காக எப்போதும் பாராயணம் செய்யவேண்டும்”, என்று ஸ்ரீ மாதாவாகிய ஸ்ரீலலிதா தேவி
ஆசி கூறினாள்.

lalitha lakshmi saraswathi

lalitha lakshmi saraswathi

Lalitha parameswari

Tripura Sundari ("Beauty of Three Worlds"), also called Shodashi ("16-year-old"), Lalita ("She Who Plays"[1]) and Rajarajeshvari ("Queen of Queens"), is one of the group of ten goddesses ofHindu belief, collectively called mahavidyas.

The goddess Tripura Sundari in her aspect as Shodasi is represented as a sixteen-year-old girl, and is believed to embody sixteen types of desire. The Shodasi Tantra, a treatise on the Tantra, describes Tripura Sundari as "Beauty Of Three Worlds". She is described as being of dusky color, and is depicted in an intimate position with an aspect of Shiva. The couple are shown on a bed, a throne, or a pedestal resting on the significant male gods of Hinduism like Brahma, Vishnu, Shiva, and Indra.

The Indian state of Tripura derives its name from the goddess Tripura Sundari. Her main temple, the Tripura Sundari temple is also located on top of the hills near Radhakishorepur village, a little distance away from Udaipur town. Kashmiri Pandits have a collection of five ancient hymns, collectively known as Panchastavi, that were composed ages ago in praise of Tripura Sundari. These ancient hymns still remain very popular among this community.

Tripura sundari or Lalita is the goddess associated with Sri Vidya. The panchadashakshari mantra is the most guarded secrets of Sri Vidya, Usually a Guru gives it to the highly deserving disciple. As it is said in Lalita sahasranama, 'Na shathaya na dushtaya na vishwasaya karhichith sri mathra bhakti yuktaya sri vidya raja vediney' means, that this divine knowledge or vidya should not be taught or given to a person who is wicked, depraved or unfaithful. It should only be taught to a deserving person as this is the King of all Vidyas. Before the panchadashakshari mantra is given the disciple is given Bala Mantra in which the goddess is visualized as 9 year old girl. However even after the pachadashakshari mantra is given there are more stages in which Shodashi the 16 letter mantra is given and then Maha Shodashi. Also there is Kameswari and Kameswara vidya where 64 lettered mantra is used. All these remain till today also in secret as it is imparted only to deserving disciples. The final stage reaches where the disciple is announced as Para Bhattaraka which means the Emperor of the whole universe. It is however to be noted that all famous personalities in the history have received Sri Vidya which includes Mahatma Gandhi, Ramana Maharshi, Swami Vivekananda (who was given Bala mantra by Ramakrishna and then subsequently Panchadashakshari mantra by Chattambi Swamigal), Meera Bai, Kabir, and the list goes on. Sri Vidya thus itself identifies as the supreme vidya available. The Sri Vidya sadhak (disciple) is identified as Bahu Tantra Vith, the one who is adept in all the other tantras. Lalita holds five flowery arrows, noose, goad and bow. The noose represents attachment, the goad represents repulsion, the sugarcane bow represents the mind and the flowery arrows are the five sense objects.

bala thripurasundari

bala thripurasundari

Bala thirupurasundhari

Bala thirupurasundhari

பாலா திரிபுரசுந்தரி:


"பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா" என்னும் லலிதா சஹஸ்ர நாம ஸோஸ்த்ரம் பாலாம்பாளின் பெருமையை விளக்கும்.பண்டாசுரனின் 30 பிள்ளைகளை 30 அம்புகளில் வதைத்தவள் பாலை.இவள் 9 வயதே நிரம்பியவளாகவும், கைகளில் அக்ஷமாலை,புஸ்தகம்,வரம்,அபயம் ஆகியவற்றை தாங்கியவளாகவும் விளங்குகின்றாள்.லலிதாம்பிகையின் இருதயத்தில் இருந்து அம்பிகையின் அம்சமாகவே தோன்றிய இந்த தேவியை வழிபடுபவர்க்கு அனைத்து இன்பங்களையும் மேலும் மோக்ஷத்தையும் வழங்குகின்றாள்.வசந்த நவராத்ரி இந்த அம்பிகைக்கே உரியதாகும்.ஸ்ரீவித்யா உபாசனையில் முதலில் பாலா திரிபுரசுந்தரி மந்த்ரத்திலிருந்தே மட்டுமே உபாசனையை ஆரம்பிக்க வேண்டும்

Bhuvaneswari

Bhuvaneswari

புவனேஸ்வரி:


அகில உலகங்களுக்கும் அன்னை, அதாவது அனைத்தையும் ஈன்றெடுத்தவள் ஆகையால் அம்பிகை புவனேஸ்வரி எனப்படுகிறாள்.தச மஹா வித்யா தேவதைகளில் ஒருவளாகவும் விளங்குகின்றாள். அனைத்து உலகங்களையும் படைத்து காத்து ரக்ஷிக்கும் பரதேவதையாக ஒரு கரத்தில் பாசமும் ,மறு கரத்தில் அங்குசமும் தரிப்பவளாகவும், வர அபய முத்திரைகள் தாங்கியவளாகவும் விளங்குகிறாள் அம்பிகை.படைப்புக் காலத்தில் உயிர்களையும்,உலகங்களையும் ஸ்ருஷ்டிக்க அம்பிகை எடுத்ததே புவனேஸ்வரி என்னும் இந்த அவதாரமாகும்.இந்த அம்பிகையை வழிபடுவோர்க்கு சர்வ மங்களங்களும் சித்தியளிப்பதாகும்

Three Goddess

Three Goddess

காமாக்ஷி:

காமாக்ஷி:
வேண்டிய வரங்களை கண்ணாலேயே கொடுப்பதால் அம்பிகைக்கு காமாக்ஷி என்று பெயர்.கா-சரஸ்வதி மா-மஹா லக்ஷ்மி ; சரஸ்வதியையும்,லக்ஷ்மியையும் தன் இரு கண்களில் வைத்திருப்பதால் காமாக்ஷி என்று பெயர்.இதனாலேயே அம்பிகை உபாசனை செய்பவர்க்கு கல்வியும் செல்வமும் சுலபமாய் சித்திக்கும் என்று சொல்வர்.மேலும் இதை க-ப்ரஹ்மா ம-விஷ்ணு அ-ருத்ரன் என்றும் பிரிக்கலாம்..ப்ரஹ்மா ,விஷ்ணு, சிவன் ஆகியோரை தனது கண்களால் உற்பத்தி செய்ததால் காமாக்ஷி என்றும் சொல்லலாம்.(இக்கதை லலிதோபாக்யாணத்தில் விரிவாய் சொல்லப்படும்).மேலும் காமனாகிய மன்மதனை உயிர் பெற்று வரச் செய்ததால் காமாக்ஷி என்றும் அம்பிகைக்கு பெயர் உண்டு.
"ஹர நேத்ராக்னி ஸந்தக்த காம சஞ்சீவ நௌஷதி:" என்று லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும்.அப்படிபட்ட காமாக்ஷி தேவியை ஆதி சங்கரர் சௌந்தர்யலஹரியிலும் , மூக ஸ்வாமிகள் மூக பஞ்சசதியிலும் அம்பிகையின் பெருமையை சொல்கின்றனர். அப்படிபட்ட அம்பிகையை பணிவோம்.அனைத்தையும் அருள்வாள் அன்னை.

மீனாக்ஷி:


மீனைப் போன்ற கண்களை உடையதால் அம்பிகைக்கு மீனாக்ஷி என்றும், மீன் எவ்வாறு தன் முட்டைகளை தன் பார்வையலேயே பொரியச் செய்து அதனை இமைக்காது காக்குமோ அப்படி அம்பிகை தன் மக்களை காப்பதால் மீனாக்ஷி என்ற பெயர் வந்தது என்றும் சொல்லலாம்.இதனையே
"உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளி" என்று லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும்.கண்களை திறப்பதாலும் மூடுவதாலும் ஸ்ருஷ்டி சம்ஹாரத்தை செய்பவள் என்று பொருள்.
மதுரையின் அரசியாகத் திகழும் இவளின் பெருமைகள் அளவற்றவை."மற்ற தெய்வங்களுக்கு வர அபய முத்திரைகள் உண்டு.ஆனால் அம்பிகைக்கு வர முத்திரையும் அபய முத்திரையும் கிடையாது.ஏன்யெனில் வரத்தையும் அபயத்தையும் தன்னுடைய திருவடியை தரிசனம் செய்த மாத்திரத்திலேயே கொடுத்து விடுகிறாளாம் அம்பிகை". என்று சௌந்தரிய லஹரி 4வது பாடலில் ஆதிசங்கரர் கூறுகின்றார்.இது மீனாக்ஷி தேவியை குறித்தே பாடபட்டது என்று சொல்வார்கள்

"தவதன்ய: பானிப்யா அபயவரதோ தைவதகன:
த்வமேகா நைவாசி ப்ரகடித வராபீத்யபினயா
பயாத்ராதும் தாதும் பலமபிச வாஞ்சா சமதிதௌ:
சரன்யே லோகனாம் த்வஹிசரணா மேவ நிபுனௌ:"

மதுராபுரி ராணியாய் விளங்கும் அம்பிகையை பணிந்து சகல நலங்களையும் பெறுவோம்.

விசாலாக்ஷி:


விசாலமான கண்களை உடையதால் விசாலாக்ஷி என்ற பெயர் அம்பிகைக்கு வந்தது .'வேல் நெடுங்கண்ணி' என்றும் சொல்வர் இந்த அம்பிகையை.விசாலாக்ஷி என்ற பெயர் அம்பிகைக்கு வந்தது ஒரு ஸ்வாரஸ்யமான கதையாகும்.ஒரு முறை மஹா விஷ்ணு பராசக்தியை குறித்து தவம் செய்கையில் அம்பிகை ப்ரசன்னமாகி தனது கண்களை ஆகாயம் முழுக்க வ்யாபித்தவாறு தோன்றும் வண்ணம் கொண்டு காக்ஷியளித்தாளாம்.இத்தகைய நீண்ட கண்களை கொண்டு காக்ஷி அளித்ததால் விசாலாக்ஷி என்ற பெயர் வந்தது அம்பிகைக்கு என்று சொல்வர். விஸ்வ நாதரின் துணையாகி எல்லா உலகங்களையும் காத்து அன்னபூரனி என்ற நாமமும் கொண்டு குறைவில்லா அன்னபான ஸ்ம்ருதியை அளிக்கும் விசாலாக்ஷியை வணங்கி சகல இன்பங்களையும் பெறுவோம்

Raja matangi

Raja matangi

ராஜ மாதங்கி:

அம்பிகையின் அளவிடமுடியாத வடிவங்களில் ஒன்று மாதங்கி என்பதாம்.ஸ்யாமளா தேவி என்றும் இந்த தேவியை சொல்வர்.ச்யாமளா தண்டகம் இந்த அம்பிகையை குறித்தே பாடப்பட்டது.தசமஹாவித்யா தேவதைகளில் ஒன்பதாவது தேவியாக விளங்கும் இந்த தேவி சரஸ்வதியின் அம்சமாய் விளங்குபவள்.வாக்கிற்க்கு அதிதேவதையாய் விளங்கும் இந்த தேவி லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மந்திரியாய் கேயசக்ர ரதத்தில் விளங்குகிறாள்.மதுரையில் கொலுவிருக்கும் மீனாக்ஷி அம்பிகை இந்த தேவியின் அம்சமே."மந்த்ரினி ந்யஸ்த ராஜ்யதூ:" என்று லலிதா சஹஸ்ரனாமம் இந்த அம்பிகையின் பெருமையை கூறும்.

Maha varahi

Maha varahi

வராஹி தேவி:

வராஹ முகமுடையதால் வராஹி என்றும் வராஹருடைய சக்தியாய் விளங்குவதால் வராஹி என்றும் கூறப்படும் இந்த அம்பிகை லலிதாம்பாளின் சேனைத்தலைவி ஆவாள்.சப்த மாதர்களில் ஒரு தேவியாகவும் விளங்குபவள் இந்த அம்பிகை."விஷுக்ர ப்ராண ஹரன வாராஹி வீர்ய நந்திதா" என்ற சஹஸ்ரனாமத்தின் படி விசுக்ரனை சம் ஹாரம் செய்தவள் இந்த அம்பிகை எனினும் லலிதா உபாக்யானம் விஷங்கனை இவள் வதம் செய்த்ததாய் கூறும்.அம்பிகையின் சக்தி அளப்பரியதாகும்.தந்த்ர உபாசனையில் வார்தாளி என்றும் பூஜிக்கப்படுகின்றாள் இந்த தேவி.காசி க்ஷேத்ரத்தில் இவளுக்கு தனிக்கோவில் உள்ளது.இந்த அம்பிகையின் அம்சமே திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆகும்.பூஜிக்கபட்டால் சர்வமங்களங்களையும் அளிக்கும் வல்லமை பொருந்தியவள் இந்த தேவி.

Akilandeswari

Akilandeswari

அகிலாண்டேஸ்வரி:


அகிலாண்டகோடி ப்ரம்மாண்டங்களையும் ஈன்ற அன்னை ஆதலின் அகிலாண்டேஸ்வரி.அகிலத்தை ஆட்சி புரிபவள்.அப்பு(நீர்) தலமாய் விளங்கும் திருவானைகாவலில் விளங்கும் இந்த அன்னை ஜம்புகேஸ்வரர்க்கு சிஷ்யையாய் விளங்குகிறாள்.எனவே அங்கு திருமண வைபவம் கிடையாது.நித்ய கன்னிகையாய் விளங்குகின்றாள் என்று ஐதீகம்.ஒரு சமயம் இந்த அம்பிகை மிகவும் உக்ரமாய் விளங்கவே ஆதி சங்கரர் அம்பிகையின் உக்ரத்தை சாந்தப்படுத்தி அவளின் உக்ரத்தை ஸ்ரீ சக்ரம்,சிவ சக்ரம் என்ற இரு சக்கரங்களில் ஆகர்ஷித்து அவளின் இரு காதுகளில் தாடங்கங்களாக அணிவித்தாரம்.மேலும் அம்பிகையின் இரு பக்க திசைகளிலும் அம்பிகையின் இரு பிள்ளைகளான கணபதியையும்,ஸ்கந்தரையும் ப்ரதிஷ்டை செய்தாராம்.ஆகவே அம்பிகை உக்ரத்தை விட்டு சாந்தசொருபினி ஆனாளாம்.மங்களமே வடிவெடுத்தார் போல் விளங்கும் இப்பரதேவதை வாராஹி தேவியின் அம்சம்.

durgambiga

durgambiga

ஸ்ரீ துர்கா:

துர்கை-துர்கம் என்றால் கோட்டை என்று பொருள்.துக்கம் ஆகிற கோட்டையை தகர்த்து எறிவதால் துர்கை என்று பெயர் அம்பிகைக்கு.துர்கமன்(துர்முகன் என்றும் சொல்வர்) என்னும் ராக்ஷசன் ப்ரஹ்மனை குறித்து தவம் செய்து அனைத்து வேதங்களும் தனக்கு வசமாகி தன்னிடத்தே இருக்க வேண்டும் என்று வரம் கேட்டான்.அதனால் மூவுலகங்களில் உள்ள வேதங்கள் அவனுக்கே வசமாகியதால் பூவுலகில் அந்தணர்களுக்கு எல்லாம் மறந்து போயின.பூவுலகில் யாகம் நடைபெறாததால் அவிர்பாகம் கிடைக்காத தேவர்கள் வலு குறைந்தவர்கள் ஆனார்கள்.ஆகையால் துர்முகன் ஸ்வர்கத்தை அடிமைபடுத்தி தேவர்களை விரட்டி விட்டான்.மேலும் பூமியில் வரட்சியும் பஞ்சமும் தாண்டவமாடியது.எனவே அந்தணர்களும்,தேவர்களும் இமயசலத்திற்க்கு சென்று பராசக்தியை த்யானித்தனர்.இவ்வாறு 300 வருடங்கள் சென்றபின்னர் வரண்ட பூமியின் மத்தியில் பரதேவதை நூறு கண்களோடு,எட்டு கரங்களோடு ஆவிர்பவித்தாள் அம்பிகை.நூறு கண்களோடு தோன்றியதால் அம்பிகைக்கு சதாக்ஷி(சதம்-100 அக்ஷி-கண்)என்ற பெயர் ஏற்பட்டது

sadakshi

sadakshi
மேலும் அம்பிகை பூவுலகில் பஞ்சத்தை போக்க தனது நூறு கண்களில் இருந்தும் எட்டு கரங்களில் இருந்தும் இடைவிடாது கருணை மழையை சொரிந்தாள்.தனது கைகளில் பலவித காய்கனிகளையும் மேலும் சக்கரம்,சூலம்,வில்,அம்பு ஆகியவற்றையும் தாங்கி இருந்தாள்.அம்பிகையின் கருனை மழையால் பூவுலகில் பஞ்சம் நீங்கியது.அந்த நல்ல நாளில் எங்கும் மங்கள ஒலிகள் நிரம்பியதால் அம்பிகைக்கு "சாகம்பரி" என்ற நாமமும் ஏற்ப்பட்டது.

shagambari

shagambari
திடீரென ஏற்பட்ட கால மாற்றத்தை கண்ட துர்முகன் காரணத்தை அறிந்து அம்பிகையை எதிர்த்து போர் புரியமுற்பட்டான்.பலத்த சைன்யத்தை கண்ட அந்தணர்களும்,தேவர்களும் அச்சம் கொள்ள அம்பிகை தனது சக்ராயுதத்தை எடுத்து அவர்களை சுற்றி சுழலவிட்டாள்.அதற்கு வெளியில் நின்று அம்பிகை துர்முகனுடன் யுத்தம் செய்தாள்.அம்பிகையின் சரீரத்தில் இருந்து காளிகா,தாரினி,பாலா,திரிபுரா,பைரவி,ரமா,பகளா,மாதங்கி,காமாக்ஷி,ஜம்பினி,மோஹினி,சின்னமஸ்தா,குஹ்யா முதலிய சக்திகள் வெளிப்பட்டு அசுர சேனைகளுடன் போர் புரிந்தனர்.

Durgambigai

Durgambigai
இவ்வாறு 10 நாட்கள் யுத்தம் முடிந்தது.11ஆம் நாள் சிவப்பு ஆடை தரித்து,செஞ்சந்தனம் பூசி,உக்ரமாய் போரிட்ட துர்முகனை கண்ட சதாக்ஷி, அவனைகொல்வதற்க்கு கோபம் கொண்டு சண்டிகையின் வடிவு கொண்டாள்.500 பாணங்களால் அவன் 8தோள்களைஅறுத்து எறிந்தாள்.நிகரற்ற 5 பாணங்களை கொண்டு அவன் மார்பை பிளந்தாள்.துர்முகன் வேர் அரித்த மரம் போன்று பூமியில் சரிந்தான்.அவனது உயிர் அம்பிகையின் திருவடிகளில் கலந்து மறைந்தது.துர்முகனை வதம் செய்ததால் அம்பிகைக்கு "துர்கா" என்ற பெயர் வந்தது. வேதங்களை மீட்டு அந்தணர்களிடம் கொடுத்த அம்பிகை தன்னை எப்பொதும் த்யானித்து வருமாறு கூறினாள்.மேலும் "துர்கா","சதாக்ஷி" என்ற நாமங்களை சொல்பவர்க்கு சர்வமங்களங்கலும் சித்தி அளிப்பதாகும் என்று அருள் மறைந்தாள்.ஆகவே அம்பிகைக்கு "துர்கை" என்ற பெயர் வந்தது.

sri durga

sri durga
துர்கையின் பெருமையை விரிவாய் தேவி மாஹாத்மியம் மற்றும் தேவி பாகவதம் போன்ற நூல்கள் பேசுகின்றன.மஹிஷாசுரனை வதைக்க சகல தேவதைகளின் சரிரத்தில் இருந்து சக்தி மயமாய் தோன்றினாள் அம்பிகை.அதுவே மஹாலக்ஷ்மி என்னும் கோலம்.இவளே மஹா துர்கா எனவும் மஹா சண்டி எனவும் கூறப்படுகின்றாள்.இத்தகைய கோலம் ஆதி மஹாலக்ஷ்மி ஆகும்.மஹாலக்ஷ்மி என்பது விஷ்னுவின் பத்னியான அம்பிகையின் கோலம்.அது வேறு கோலம் இது வேறு.ஆயினும் ஒரே சக்தியான பராசக்தியின் பல்வேறு வடிவங்களே துர்கா,கௌரி,லக்ஷ்மி,சரஸ்வதி,காயத்ரி,லலிதா,ராதா,சாவித்ரி,காளி ஆகியன.ஆதியில் அம்பிகை துர்கை வடிவம் கொண்டாள் என்றும் அதில் இருந்தே கௌரி,லக்ஷ்மி,சரஸ்வதி ஆகிய முப்பெரும்தேவிகள் வந்தார்கள் என்று தேவி பாகவதம் கூறுகின்றது.இத்தகைய மஹிமை உடையவள் துர்கை.
"துர்கே ஸ்ம்ருதா ஹரசி பீதி மஷேச ஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதி மதிவ சுபாம் ததாசி
தாரித்ரிய துக்க பய ஹாரினி காத்வதன்யா:
சர்வோபகார கரனாய சதார்த்ர சித்தா:"
தேவி மாஹாத்ம்யம்
"துர்கே! உன்னை நினைத்த மாத்திரத்தில் சகல துன்பங்களையும் போக்கி விடுகின்றாய்.சந்தோஷமாக இருக்கும் சமயத்தில் நினைத்தால் பரம மங்களமான நல்லறிவையும் தருகின்றாய்.வறுமை,துன்பம்,பயம் ஆகியவற்றை போக்குபவளே.எல்லார்க்கும் நன்மைகள் செய்ய எக்காலமும் நினைந்து உருகும் மனதை உடையவர் உனை அன்றி வேறு யார் உளர்" என்று சொல்கிறது தேவி மாஹாத்ம்யம்.அப்படி பட்ட துர்காம்பிகையை வணங்கி சர்வ மங்களங்களையும் பெறுவொம்

durgai ambal

durgai ambal

Lalithambal

did you ever visit thirumeeechur

Awesome Inc. theme. Powered by Blogger.